Naan Pudicha Mosakuttiyae

நான் புடிச்ச மொசக்குட்டியே
என் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு

என் உசுர திருடி புட்டு
ஏன் டா பையா அடகு வெச்ச
கண்ணாடி பொம்மை நான் பாத்துக்க பாத்துக்க
கையால என்ன தான் போத்திக்க போத்திக்க
சாட்சாயே சொல்லால
மூச்செல்லாம் உன் மேல
காத்தாகி உன்ன தொடுவேன்

மீசை கொண்டு
ஊசி நான் போடணும்
ஆசை வச்ச
ஆளத்தான் பார்க்கணும்

பாய்க்கு லீவு விட்டாயே
நோய்க்கு டோக்கன் தந்தாயே
நாற்காலியா நான் மாறவா
தேவதையே உட்கார வா
தூரம் தானே ஈரம்
பேசும் அருகே வந்தால்
மோசமாய் போகுதே

நான் புடிச்ச மொசக்குட்டியே
என் மனச கசக்கிட்டியே

போன் நம்பர்
போதைய ஏத்துதே
பேச்சு இப்ப
பாதைய மாத்துதே
நூலின்றி ஊசி கோர்த்தேனே
மீன் வாங்கி சாம்பார் வெச்சேனே
ஹைக்கூ பேச்ச ஆரம்பிச்சு
நாவல் போலே ஆகிப்போச்சே
பட்டாம் பூச்சி ரெக்கை வாங்கி
இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே

நான் புடிச்ச மொசக்குட்டியே
என் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு

தானனானே தன்னனன்னே
தானனானே தன்னனன்னே



Credits
Writer(s): G. V. Prakash Kumar, Yegathasi
Lyrics powered by www.musixmatch.com

Link