Kanne Karisalmannu

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
கண்ணீரில் நீந்துகின்ற மீனே

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

ஊத்து மணலெடுத்து உப்புக் கடல் நீரெடுத்து
நேத்து வரக் கட்டி வச்ச கோட்டை
இன்று காத்தடிச்சு கலைஞ்சுதான் போச்சே

ஆத்து நீர் நுரையாச்சே
அவள் சொந்தம் அவமான கதையாச்சே
அட சாத்தி வச்ச வீட்டுக்குள்ளே ஏத்தி வச்ச விளக்காய்
உள்ளத்துக்குள் சூடுபட்ட மலரே
இது ஊரு சனம் தள்ளி வச்ச நிலவே

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

கண்ணீரின் திரைக்குள் கட்டாய சிறைக்குள்
பூட்டி அடைச்சு வச்ச பாசம் இதில்
போட்டு நடத்தி வரும் சோகம் ஓயாத புயலாலே
தூங்காமல் போராடும் அலை மேலே

மனம் தாங்காத சுமையுடன் தள்ளாடி தள்ளாடி
கரைதனை தேடுதோ படகு
இந்தக் கதைக்குத்தான் தெரியல முடிவு

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே



Credits
Writer(s): Deva, Kaalidaasan Kaalidaasan
Lyrics powered by www.musixmatch.com

Link