Janaki Devi Ramanai Thedi

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

சீதை வணங்கி எழுந்தாளே
கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே
ரகசிய புன்னகை புரிந்தாளே

பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம் மௌனம் சம்மதம்தானே

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

ராமன் சீதை முகம் பார்க்க
ராமன் சீதை முகம் பார்க்க
சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட
நாயகன் அங்கங்கே எடை போட

பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Ganesh Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link