Ghandhari Yaaro

காந்தாரி யாரோ??
கண்பாராததாரோ?
சூதாடும் போது
வான் சூழூறைத்ததாரோ?
சீதைகள் யாரோ?
சிறை மீளாததாரோ?
போராடும் போது
தீமூட்டிச் சென்றதாரோ?
சிறுபுள்ளி வைக்கின்றாய்.
பெரும்கோலம் படிக்கின்றாய்.
அழகே நீயும் யாரோ??
கடவுளின் துகள் தானோ??
கண்ணே என் காதம்பரி.
கண்மூடி தூங்கும் கிளி.
காலங்கள் ஓடும் இனி.
வாகை சூட ஓடி வா வா...
எங்கெங்கும் கொல்லும் கைகள்...
கோளாறு செய்யும் பொய்கள்.
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா...
காந்தாரி யாரோ??
கண்பாராததாரோ?
சூதாடும் போது
வான் சூழூறைத்ததாரோ? யாரோ?

கருவிலே தொடங்குதுன் களங்கமே.
கள்ளிப்பால் கலப்பதே கலை...
படிக்கவும் பழகவும் பல தடை
அதிலுமோர் நெருஞ்சிதான் உடை.
காதல் வந்தால் போதும்.
அதற்கும் உடனே பெரும் திரை விழும்.
காதல் கொண்ட நெஞ்சம்
ஒருவன் நினைவில் சதா
வதை படும்...
கல்லையும் முள்ளையும் தந்தாலும்
கால்களில் காயங்கள் வந்தாலும்
தாண்டி தாண்டி வந்தோமே.
தாமரையாகி நின்றோமே.

கண்ணே என் காதம்பரி.
கண்மூடி தூங்கும் கிளி.
காலங்கள் ஓடும் இனி.
வாகை சூட ஓடி வா வா...
எங்கெங்கும் கொல்லும் கைகள்...
கோளாறு செய்யும் பொய்கள்.
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா...
வா வா.
வா. வா...

மனைவியாய் பெயர்தரும் திருமணம்.
தன் பெயர் தொலைந்திடும் தினம்.
மழலையை ஏந்திய மறுகணம்.
தாயென தலையிலே கணம்...
ஓடி ஓடி ஓடி அலுத்து
திரும்பும் நொடி.
பெரும் இடி...
சாய்ந்து சாய்ந்து நின்று
முதுகில் எலும்பே இல்லா
விழும் கொடி.
ஆனைகள் இல்லா அம்பாரி.
அந்தரம் ஆடிடும் பெண்தூரி.
சம்பளம் இல்லா சம்சாரி.
சாசனம் மாற்றிட வா வா நீ...
கண்ணே என் காதம்பரி.
கண்மூடி தூங்கும் கிளி.
காலங்கள் ஓடும் இனி.
வாகை சூட ஓடி வா வா...
எங்கெங்கும் கொல்லும் கைகள்...
கோளாறு செய்யும் பொய்கள்.
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா...
கண்ணே என் காதம்பரி.
கண்மூடி தூங்கும் கிளி.
காலங்கள் ஓடும் இனி.
வாகை சூட ஓடி வா வா...
எங்கெங்கும் கொல்லும் கைகள்...
கோளாறு செய்யும் பொய்கள்.
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா...
வா வா
வா வா
வா வா
வா வா



Credits
Writer(s): Thamarai, Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link