Urikka Urikka

உறிக்க உறிக்க வெங்காயம் உறியும்
காதல் வந்தா மனசும் உறியும்
கடைசியில் ஒன்னும் இல்லையே
விளக்கில் முட்டும் விட்டில் போல
பையன் வாழ்க்கை மாறுமே

மாறுமே... ஏமாறுமே...
மாறுமே... ஏமாறுமே...

பையன் மனசு சட்டிய போல
பொண்ணு மனசு சல்லடை போல
ஆயிரம் தொண்டி இருக்குடா
தொண்டி வழியா சாரம் போக
மண்டி மட்டும் தேறுமே

மாறுமே... ஏமாறுமே...
மாறுமே... ஏமாறுமே...

பையன் கனவில் பொண்ணு வருவா
தாவணி உருவி தருவா
பொண்ணு கனவில் யாரோ வருவான்
உசுர திருகி தருவான்

எந்த புத்தில் எந்த பாம்போ
எட்டி பார்த்தால் சிவ சிவ சம்போ
காலை சுத்தி கடிக்குமே
புத்திக்குள்ள புத்து கட்டி
கொத்தி கொத்தி தின்னுமே

மாறுமே... ஏமாறுமே...
மாறுமே... ஏமாறுமே...

பொண்ணு ஒருத்தி தனக்கே சொந்தம்
என்பது பையன் கணக்கு
பொண்ணுக நெஞ்சில் ஏற்ற தாழ்வு
எங்கேயும் எப்போவும் இருக்கு

மறைக்க மறைக்க மாயா ஜாலம்
திறக்க திறக்க எல்லாம் மாயம்
வெளியே பொய்யா போகுமே
கொள்ளை கொள்ளும் அழகாய் வந்து
கொல்லும் நோயாய் மாறுமே

மாறுமே... ஏமாறுமே...
மாறுமே... ஏமாறுமே...

பொண்ணுக மேல பைத்தியம் ஆகி
புரண்டு சுத்துது பூமி
சாக்கடை ஓரம் பூக்குற பூவுக்கு
சண்டை எதுக்கு சாமி

காணும் அழகு எல்லாம் பொய்யி
காத்தடைச்ச காலி பையி
காமம் போனால் விளங்குமே
ஆலை இலை போல் தோன்றிய அழகு
அரசன் சருகாய் மாறுமே

மாறுமே... ஏமாறுமே...
மாறுமே... ஏமாறுமே...

புத்தரும் சித்தரும் லட்சிய பக்தரும்
சொன்னது சொன்னது துறவு
உறவுக்கென்ரொறு ஒரு பொண்ண பார்த்தா
துறவுக்கே ஒரு துறவு

தீண்டும் வரைக்கும் குப்புன்னு இருக்கும்
தீர்ந்து போனா சப்புன்னு இருக்கும்
சக்கரை உப்பு கரிக்குமே
கற்று தந்து தேறாத மனசு
பட்டு தெளிந்து மாறுமே

மாறுமே... ஏமாறுமே...
மாறுமே... ஏமாறுமே...



Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link