Vanthaal Puguntha

வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே
பொன் மஞ்சள் சுமந்து
மாலை சுமந்து வந்தாள் மணமகள்
இவள் நூறு ஆண்டு தலைவனோடு
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி

அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்
பெத்தெடுத்த தாய் எனவே நினைத்திடு நாளும்
பெண் குழந்தை ஏதும் இல்லை அவள் இருந்தாளே
அந்த குறை தீர்த்து வைக்க வந்த இளமானே

ஒரு பொன்னாள் என்பதும் நன்னாள்
என்பதும் உன்னால் வந்ததம்மா
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ

இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே

வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே
வண்ண மயில் மன்னனுடன் வாழ வந்தாளே
தெள்ளு தமிழ் பண்புகளை காத்திருப்பாளே
தாரம் அவதாரம் என்று பேர் எடுப்பாளே

இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்
வந்தாள் பொன்மகளே
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே

இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே

பொன் மஞ்சள் சுமந்து
மாலை சுமந்து வந்தாள் மணமகள்
இவள் நூறு ஆண்டு தலைவனோடு
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி



Credits
Writer(s): Vaali, Ramasamy Narayanan Sirpy
Lyrics powered by www.musixmatch.com

Link