Usuravachen Mama

உசுர வைச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வைச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா

உசுர வைச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வைச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா
உசுர வைச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வைச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா

ஏ புளிய மரத்த பாரு, புளிய மரத்த பாரு
புளிய மர தோப்புக்குள்ள பூங்காவன வீட்டை பாரு
பூங்காவன வீட்டுக்குள்ள மச்சானே
நாம புது குடித்தனம் போகலாமே மச்சானே

ஏ ஆலமரத்த பாரு, ஆலமரத்த பாரு
ஆலமர தோப்புக்குள்ள அழகான கூட்டை பாரு
அழகான கூட்டுக்குள்ள மச்சானே
நாம ஆடி பாடி இருக்கலாமே மச்சானே

நான் காதுக்கு தோடு கேட்டு கடுகடுன்னு பேசினேனா
மூக்குக்கு கல்லு கேட்டு முகம் சுளித்து நின்னேனா
கழுத்துக்கு நகை கேட்டு கண்டபடி தான் பேசினேனா
காலுக்கு கொலுசு கேட்டு கோவப்பட்டு தான் நின்னேனா
ஆசை வச்ச நேச மச்சான் அன்ப தானே கேட்டேன்
ஒரு மஞ்சத் தாலி கேட்டேன்

ஏ தென்ன மரத்த பாரு, தென்ன மரத்த பாரு
தென்ன மர தோப்புக்குள்ள தென்றல் வந்து வீசும் பாரு
தென்றலோட சேர்ந்து நாம மச்சானே
ஒரு தெம்மாங்கு தான் பாடலாமே மச்சானே

ஏ கொய்யா மரத்த பாரு, கொய்யா மரத்த பாரு
கொய்யா மர தோப்புக்குள்ளே கொஞ்சி பேசும் குயில பாரு
கொஞ்சி பேசும் குயில போல மச்சானே
நாம கூடி பேசி இருக்கலாமே மச்சானே

உசுர வைச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வைச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா



Credits
Writer(s): S Thamari
Lyrics powered by www.musixmatch.com

Link