Kambathu Ponnu

கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆலமரத்து இலடா
அவ கன்ன குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டை சடடா
இப்போ பாக்குது என்ன தொடடா

அட டா டா மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்ன நீ சாய்க்காதே
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மெய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல

கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு

கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற

தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
அம்மியா அறைக்கிற ஆள நீ அசத்துர
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர
சவ்வுமிட்டாயி watch'a போல
என்னதான் கட்டிக்கிட்ட
அடி குச்சி ஐஸு கரைய போல சட்டையில ஒட்டிகிட்ட
கடுங்காபி இதம் போல
மனச நீதான் ஆத்துற
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு

ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறன் முழுங்கறேன்
வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மல போல மனச நீயும் ஆட்டுர
பஞ்சு மிட்டாயி ரெண்டா திருடி கன்னத்தை செஞ்சுக்கிட்ட

அடி ஈசல் இறக்கைய பிச்சு வந்து
இதயத்தை நெஞ்சுகிட்ட
ஆத்தாடி காத்துல உன் பெயரைத்தான் கூவறேன்
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு

கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு



Credits
Writer(s): Yegathasi, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link