Avan

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா
அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

நீ ஒரு நாடகம்
குறு நாடகம்
புது மேடையாய் அவன்

நீயோ ஒரு பொம்மையாய்
உயிர் பொம்மையாய்
உன்னை அசைப்பவன் அவன்
நீங்கா கனவாய்
உன் கண்ணில் நீளுகின்றான்
முடியா ஓர் இசையாய்
உன் காதில் வாழுகின்றான்
பாவம் அம்மரணம்
அதன் வேலை கெடுக்கிறான்
அடடா இறந்தும் இறந்தும் இறந்தும்
கொடுக்கிறான்
சீதக்காதி

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா
அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா



Credits
Writer(s): Govind Vasantha, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link