Takkaru

டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தலை போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே

Mother'u tongue'ah மறந்தேனே
செதறு தேங்கா ஆனேனே
தரையில நான் மெதந்தேனே
பறந்தேனே...

குத்தீட்டி கண்ணால
குத்தீட்டு போகுறியே
வித்த நீ காட்டுறியே
காட்டுறியே...

பாவி என் மனச நீ கலைச்சையே
நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே

டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

ஆறேழு மணியானா தீந்து போகும்
Android'u நான் இல்லடி
ஏழேழு ஜென்மமும் கூடவரும்
உன்னோட would be'யடி

ஓவியத்த ஓரங்கட்டும்
கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல
ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன்
ஒன்னாட்டம் பொண்ணே இல்ல

என் காதல் whatsapp'ல
நீதானே dp புள்ள
Night எல்லாம் நான் தூங்கல
ஒன்னால ரொம்ப தொல்லா

டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

அய்யையோ முன்னால அவ நிக்கறா
அஞ்சாறு நிலவாட்டம்தான்
Power cut'u ஆனாலும் பரவா இல்ல
Inverter அவ கண்ணுதான்

இறகுபந்து நான்தானடி
எகுறிதான் எங்கேயோ போனேனடி
மரக்கிளையா ஒன்கிட்டதான்
மாட்டியே நிக்குறேன்டி

கை வீசி நீ நடந்தா
காத்தெல்லாம் கிறுகிறுக்கும்
மலர்ப்பாதம் பட்டதனால்
மண்ணுக்கும் மதம் புடிக்கும்

டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தலை போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே



Credits
Writer(s): Prakash Kumar G V, Shiva Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link