Nenjukulle Vaazuhirai

सध्गुरु साईनाथ महाराज की जय

நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி
நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

கோகுலம் கொண்ட அந்த மாதவனாக
கோபியர் சூழ்ந்த அந்த கோவிந்தனாக
நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

மனமுருகி சாயி என்று உனைத்தான்
உரக்கச் சொல்லி அழைத்துவிட்டால்
நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

அங்கும் இங்கும் எங்கும் எதிலும் நீதான்
அன்றும் இன்றும் எப்பொழுதும் நீதான்
அன்னையும் தந்தையும் நீதான்
சொந்தமும் பந்தமும் நீதான்

அங்கும் இங்கும் எங்கும் எதிலும் நீதான்
அன்றும் இன்றும் எப்பொழுதும் நீதான்
காலையில் சூரியன் நீதான்
மாலையில் சந்திரன் நீதான்

வருட வரும் தென்றல்
அந்த வானில் தோன்றும் மின்னல்
ஷீரடி வாழும் மன்னன்
என் சித்தம் கவர் கண்ணனாக

நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

விண்ணும் மண்ணும் ஆளுகின்றாய் சாயி
எண்ணும் போதே தோன்றுகிறாய் சாயி
கடல்தனில் அலையினைப் போலே
அசைந்திடும் கொடியினைப் போலே

விண்ணும் மண்ணும் ஆளுகின்றாய் சாயி
எண்ணும் போதே தோன்றுகிறாய் சாயி
மடியினில் குழந்தையைப் போலே
பசுவுடன் கன்றினைப் போலே

வானவில்லின் ஜாலம்
மழை தூவுகின்ற மேகம்
பாடவைக்கும் ராகம்
எனை வாழவைக்கும் யோகமாக
நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

கோகுலம் கொண்ட அந்த மாதவனாக
கோபியர் சூழ்ந்த அந்த கோவிந்தனாக
நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

மனமுருகி சாயி என்று உனைத்தான்
உரக்கச் சொல்லி அழைத்துவிட்டால்
நெஞ்சுக்குள்ளே வாழுகிறாய் சாயி
என் கண்ணுக்குள்ளே ஆடுகிறாய் சாயி

சாயிராம் சாயிராம்
சாயி சாயி சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயி சாயி சாயிராம்
சாயி சாயி சாயி சாயிராம்
சாயி சாயி சாயி சாயிராம்
சாயி சாயி சாயி சாயிராம்
சாயி சாயி சாயி சாயிராம்



Credits
Writer(s): Sethumani Anantha, Jeyprakas
Lyrics powered by www.musixmatch.com

Link