Maalaigal Idam

மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம் மங்களம் மங்களம்

மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே

நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை

தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்
பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்
தாகங்கள் வரும் மோகங்கள்
இனி தத்தளிக்கும்

ம்ம் ம்ம் தேகங்கள் தரும் வேகங்கள்
வெள்ளி முத்தெடுக்கும்
ம்ம் ம்ம் தந்த சுகம் கண்ட மனம்
கண்கள் படித்திடும் சொந்தம் இனித்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது
ஆனந்தமாகவே

தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தனான தந்தன தந்தன
தந்தனான தந்தன தந்தன னா

கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்

கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்
ஆரங்கள் பரிவாரங்கள்
பல அற்புதங்கள்

ம்ம் ம்ம் எண்ணங்கள் பல வண்ணங்கள்
எழில் சித்திரங்கள்
ம்ம் ம்ம் இன்று முதல் இன்னிசைகள்
இங்கு பிறந்திடும் எங்கு பறந்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம் மங்களம் மங்களம்

மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link