Kaanal Neeraai - From "Writer"

கானல் நீராய்
கடக்கும் வழியில் தெரியும் சுனையே
வானம் தீண்டும்
தன் வாழ்வை மீட்டும் பல விழுதாய்

யாதும் நீயாய்
உலகம் சுழலும் சுழலும் தனியே
வேரில் நீராய்
சேரும் உயிரின் உறவின் நல் வரவே

தீ எரியும் கிளையின் துளிரும்
காற்றோடு அது புகையாகும்
காயாத மழை நாள் வரவில்
அத்தனை எத்தனை உயிர் எழும்பும்

தன் கன்று முட்டும் வலியை
தாங்காத பசுதான் உண்டோ
நானே நீ ஆனது கண்டே
என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்

மாலை வந்தே சூழும்
நாளை வந்தே தீரும்
நான் யாரோ தேடும்
இருட்டை போல் ஆனேன்

புல் நிலம் மாறும்
பூ மழை தூவும்
காற்றும் நாற்றும்
கதிராய் விளையும்

நீளும் பாதை எங்கே தேடும் சிறகானேன்
ஆணும் தாயாய் நெகிழும் அன்பில் மெழுகானேன்
நம்மை சூழும் வாழ்வும் புதிரே நிரையும் எதிரில் என்றும்
கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே



Credits
Writer(s): Govind P Menon, Muthuvel Muthuvel
Lyrics powered by www.musixmatch.com

Link