Nizhalo Nijamo

ஆஹ-ஹான், ஆஹ-ஹான்
ஆஹ-ஹான்-ஹான்-ஹா-ஹான்

நிழலோ, நிஜமோ, என்று போராட்டமோ
நிழலோ, நிஜமோ, என்று போராட்டமோ
திசை இல்லை வழி இல்லை
இதில் தேரோட்டமோ
நிழலோ, நிஜமோ, என்று போராட்டமோ

திசையை தேடி தவிக்கின்றேன்
சிறகை தேடி பறக்கின்றேன்
கண்ணீரில் நீராடினேன்
திசையை தேடி தவிக்கின்றேன்
சிறகை தேடி பறக்கின்றேன்
கண்ணீரில் நீராடினேன்
பூவில் போட்ட மஞ்சம் அங்கே
முள்ளில் செய்த பாதை இங்கே
தர்மம் இங்கு தோல்வி கண்டால்
கேள்வி கேட்க தெய்வம் எங்கே
வாடை காற்று வந்தாலும்
மனதில் பயமே எழுமே

நிழலோ, நிஜமோ, என்று போராட்டமோ

மரணத்தின் வாடை அடிக்கின்றதே
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே
பூகம்பம் உண்டானதே
மரணத்தின் வாடை அடிக்கின்றதே
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே
பூகம்பம் உண்டானதே
வாழ்வை தேடி வந்தோம் இங்கே
சாவு நம்மை தேடும் எங்கே
கன்னி மானை காட்டில் பார்த்து
கன்னி வைத்த வேடன் எங்கே
இந்த நேரம் என்னாகும்
தினமே கலங்கும் மனமே

நிழலோ (ஆ-ஆ) நிஜமோ (ஆ-ஆ)
என்று போராட்டமோ (ஆ-ஆ)
திசை இல்லை வழி இல்லை
இதில் தேரோட்டமோ
நிழலோ (ஆ-ஆ) நிஜமோ (ஆ-ஆ)
என்று போராட்டமோ (ஆ-ஆ)



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link