Thindaathuthey

திண்டாடுதே ரெண்டு கிளியே
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து ஆறா போகுதே
என்ன தல விதியோ?
என்ன விடுகதையோ?
இது என்ன தல விதியோ?
என்ன விடுகதையோ?
திண்டாடுதே ரெண்டு கிளியே

மந்தையாடு மாறிப்போனா சந்தையில தேடுவேன்
சொந்தம் இங்கு மாறிப்போச்சு என்ன சொல்லி பாடுவேன்?
சிக்கல் உள்ள நூலிலே முடிவெது தெரியலே
சிக்கல் உள்ள நூலிலே முடிவெது தெரியலே
ஒத்தையடி பாதையில சோடி ரெண்டு போகாதே
கட்டளைக்கு கட்டுப்பட்டால் காதல் இங்கு வாதே
கண்ணில்லாம கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே ஆகாதே

திண்டாடுதே ரெண்டு கிளியே
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து ஆறா போகுதே
என்ன தல விதியோ?
என்ன விடுகதையோ?
இது என்ன தல விதியோ?
என்ன விடுகதையோ?

மாலை ரெண்டு வாங்கி வந்தேன்
மாலைக்கென்ன தோஷமா?
மாமனுக்கு நாடகத்தில் ரெண்டும் கெட்ட வேஷமா?
விடுகதை யாருக்கு சொல்லி விடு சாமிக்கு
விடுகதை யாருக்கு சொல்லி விடு சாமிக்கு
தீராத இந்த வழக்கு அம்பலத்தில் ஏறாது
சொல்லாத காயம் அம்மா சொல்லி இது ஆறாது

கண்ணில்லாம கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே ஆகாதே
திண்டாடுதே ரெண்டு கிளியே
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து ஆறா போகுதே
என்ன தல விதியோ?
என்ன விடுகதையோ?
இது என்ன தல விதியோ?
என்ன விடுகதையோ?



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link