Vizhiyile Mani

விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ம்-ஹும்-ஹு-ஹும்
உந்தன் விரல் தொடும் இடங்களில்
பொன்னும் மின்னும்

விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில்
பொன்னும் மின்னும்

ஆ-ஆ-ஆ-அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில் கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
ஆ-ஹ-ஹ-ஹ
கோடி (ஹ-ஹ) மின்னல் (ஹ-ஹ) ஓடி (ஹ-ஹ)
வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் குழல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகை படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

ப-ப-பா-பா
லா-லா-லா-லா

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
ஆ-ஹா
காதல் (ஹ-ஹ) தேவன் (ஹ-ஹ) உந்தன் (ஹ-ஹ)
கைகள் (ஹ-ஹ) தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில்
பொன்னும் மின்னும்

ஒ-ஒ-ஒ-அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில் கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Pulavar Pulamaippithan
Lyrics powered by www.musixmatch.com

Link