Aalamarathulathan

ஆலமரத்துல தான் ஒரு கூடு கட்டி
நித்தம் ஆசை விழுதுகளில் மணி ஊஞ்சல் இட்டு
ஆடிக் கிடந்தது அம்மா ஒரு ஜோடி கிளி
ரெண்டும் ஓடி திரிந்ததம்மா இன்று வேறு வழி
சாதி விட்டு சாதி வந்து காதலிச்ச பாவம் இதா
என்ன சொல்ல ஏது சொல்ல காலம்
செய்த கோலமிதா

ஆலமரத்துல தான் ஒரு கூடு கட்டி
ஆடிக் கிடந்தது அம்மா ஒரு ஜோடி கிளி

ஒன்னுக்கொன்னு நேசம் தான்
ஒட்டுறவு பாசம் தான்
பூணூலுக்கும் சிலுவைக்கும் தான் உன்டாச்சி
நேற்று வரை காதல்தான் இன்று முதல் மோதல் தான்
பைபிளுக்கும் கீதைக்கும்தான் வந்தாச்சு
பகை மதம் என்ற பெயராலே உண்டாச்சுது
அன்பு மனம் இரண்டு அதனாலே பிரிவாச்சு
அது தவறு என்று எவர் சொல்வது

ஆலமரத்துல தான் ஒரு கூடு கட்டி
நித்தம் ஆசை விழுதுகளில் மணி ஊஞ்சல் இட்டு

வத்திக்குச்சி இல்லாம பத்த வச்சு பார்த்தாங்க
பத்த வச்ச சிறு பொறி தான் தீ ஆச்சு
சொந்தங்களும் துண்டாக சோகங்களும் உண்டாக
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தோதாச்சு
இங்கு முடியாத இரவேதும் கிடையாதம்மா
வானம் ஒருபோதும் இரண்டாக உடையாதம்மா
உண்மை உறவென்றும் பொய்யாகுமா

ஆலமரத்துல தான் ஒரு கூடு கட்டி
நித்தம் ஆசை விழுதுகளில் மணி ஊஞ்சல் இட்டு
ஆடிக் கிடந்தது அம்மா ஒரு ஜோடி கிளி
ரெண்டும் ஓடி திரிந்ததம்மா இன்று வேறு வழி
சாதி விட்டு சாதி வந்து காதலிச்ச பாவம் இதா
என்ன சொல்ல ஏது சொல்ல காலம்
செய்த கோலமிதா

ஆலமரத்துல தான் ஒரு கூடு கட்டி
ரெண்டும் ஓடி திரிந்ததம்மா இன்று வேறு வழி

Credits
Writer(s): Deva, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link