Vannanilavae - Female

லலலால லலலால லலலா
லலலால லலலால லலலா
லால லல்லல் லல்லல் லால லல்லல் லால
லால லல்லல் லால லால லல்லல் லாலலா

வண்ண நிலவே, வைகை நதியே
சொல்லி விடவா, எந்தன் கதையை?
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்

வண்ண நிலவே, வைகை நதியே
சொல்லி விடவா, எந்தன் கதையை?

மான் ஒன்று துள்ளி-தான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று, அரசாண்டக் காடு
அம்மாடி அதுதான், பொல்லாதது
ஆனாலும் மான் மேல், அன்பானது

கல்யாண மாலைதான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட
பழைய வாழ்க்கை மாற
ஆஆஆ... ஆஆஆ

வண்ண நிலவே, வைகை நதியே
சொல்லி விடவா, எந்தன் கதையை?

தாலாட்ட நானும், தாயாக இன்று
தோள் மீது ஆடும், மான் போட்டக் கன்று
மானாடும் சோலை, நம் வீடுதான்
ஆனந்தம் என்றும், நம்மோடுதான்

பாடாதா தேனீக்கள் இங்கில்லை
வாடாத ரோஜாப் பூ என் பிள்ளை
காலம் உள்ள வரைதான்
வாழும் இந்தக் கதைதான்
ஆஆஆ... ஆஆஆ

வண்ண நிலவே, வைகை நதியே
சொல்லி விடவா, எந்தன் கதையை?
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்

வண்ண நிலவே, வைகை நதியே
சொல்லி விடவா, எந்தன் கதையை?



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link