Athamaga Thangathukku

அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்
நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்
செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே
செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே
தூளி ஆட வா தோளில் ஆட வா

அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்
நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்
செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே
தூளி ஆட வா தோளில் ஆட வா

சோடி கிளி வேணுமின்னு
சொல்லுதடி மாமன் பொண்ணு
சோடி கிளி வேணுமின்னு
சொல்லுதடி மாமன் பொண்ணு
கண்ணுக்குள்ளே சுணக்கம்
கண்டதில்ல உறக்கம் மேனி வாடுதே

காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை
தண்ணி பாய்ச்ச நேரமில்லை
காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை
தண்ணி பாய்ச்ச நேரமில்லை
மேகம் பாத்து எளங்கொடி வதங்குது

அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்
நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்

ஹேமழைத் தண்ணி இல்லாம
ஹே மாந்தோப்பு வாடுதண்ணே
தண்ணி வந்து பாஞ்சிபுட்டா
தங்க மாங்கா காய்க்கும் அண்ணே
ஏலே ஏலேலேலோ

தொண்டைக்குள்ளே விக்குதுதடி
வார்த்தையெல்லாம் சிக்குதடி
தொண்டைக்குள்ளே விக்குதுதடி
வார்த்தையெல்லாம் சிக்குதடி
கொலுசு சொல்லும் எந்தன் மனசு
கேட்கவில்லையா

பாள போடும் தென்னம்புள்ள
தேதி நேரம் பார்ப்பதில்லை
பாள போடும் தென்னம்புள்ள
தேதி நேரம் பார்ப்பதில்லை
காலம் வந்தா மயிலுக்கு மழை வரும்

அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்
நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்
செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே
செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே
தூளி ஆட வா தோளில் ஆட வா
தூளி ஆட வா தோளில் ஆட வா

Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link