Kanaal Kadhal

கண்ணால் காதல் உண்டாச்சு
கண்ணாமூச்சி என்றாச்சு
பொய்யாய் போகும் வாழ்க்கையுமே
பொய்க்கால் ஆட்டம் ஆச்சுதடா ஹ

கண்ணால் காதல் உண்டாச்சு
கண்ணாமூச்சி என்றாச்சு

காதலர் ஜோடி சிந்துப் படிக்க
காலையும் மாலையும் கண்டு ரசிக்க
ஊரையும் உறவையும் நம்பும் மனிசன்
ஆதையை மாத்த நாள் பாத்தான்

போகுற போக்கில் விட்டுப் பிடித்து
காதலை கனவாய் செய்ய நினைத்தான்
ஏடுகள் ஏதும் படித்ததில்லை
ஆகசம் பேசி நடித்தானே

சொன்னாரே ஒரு சேதி
மண்மேலே பொது நீதி
கொண்டாலும் புது நேசம்
ஒப்பாது பந்தப் பாசம்
பெண் ஆசை வீண் மண் ஆசை
என்னாளும் வேண்டாம்

கண்ணால் காதல் உண்டாச்சு
கண்ணாமூச்சி என்றாச்சு
பொய்யாய் போகும் வாழ்க்கையுமே
பொய்க்கால் ஆட்டம் ஆச்சுதடா

கண்ணால் காதல் உண்டாச்சு
கண்ணாமூச்சி என்றாச்சு

ஆணையும் பெண்ணையும் சேர்த்துப் படைத்தான்
ஆண்டவன் காதலை நெஞ்சில் வீதைத்தான்
ஆணவக்காரன் கண்டுக் கொதித்தான்
ஆணயும் பெண்ணையும் ஏன் பிரித்தான்?

சோதனையானது நல்ல மனது
வாழ்க்கையில் வேதனை தீராது
பாமரன் தானே இந்தச் சகுனி
ஆடவர் மேடைப் பார்த்தானே

கல்யாண கலைத் தேடி
கண்டாச்சு புது ஜோடி
பல்லாண்டு பலர் கூற
கொட்டாதோ கெட்டி மேளம்?
பெண்ணோடு ஆண் யார் என்றே?
தெய்வம் தான் சேர்க்கும்

கண்ணால் காதல் உண்டாச்சு
கண்ணாமூச்சி என்றாச்சு
பொய்யாய் போகும் வாழ்க்கையுமே
பொய்க்கால் ஆட்டம் ஆச்சுதடா ஹ

கண்ணால் காதல் உண்டாச்சு
கண்ணாமூச்சி என்றாச்சு



Credits
Writer(s): Ilaiyaraaja, Kuruvikkarambai Shanmugam
Lyrics powered by www.musixmatch.com

Link