Poo Naazhi Pon Naazhi

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வானல்லி சோரூட்ட வாறேன்
தோளேத்தி ஊற காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிற்கும் போது உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து நாளும் வேருக்கு உரமாவேன்

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா

மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீ தாண்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூ தாண்டா
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீ தாண்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீ தாண்டா
உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என் ஆசை உச்சத்துக்கு என் ராசா போனும்

தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்த்திடுமே சிந்தும் சோறும் அன்னதானத்தில்
உன் பேச்சில் புஞ்சை காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வானல்லி சோரூட்ட வாறேன்
தோளேத்தி ஊற காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிற்கும் போது உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து நாளும் வேருக்கு உரமாவேன்

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா



Credits
Writer(s): Ekadasi, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link