Why Penne

தேடி தேடித் தொலைந்து போனேன் பெண்ணே
காலம் தோறும் கரைந்து போனேன் பெண்ணே
ஏன் என்னை ஊமை போல் கதற வைத்தாய்
உன்னை எண்ணி தவிக்கிறேனே பெண்ணே
உள்ளபடி உரைக்கிறேனே பெண்ணே
நீ இருக்கையில் இருக்கிறேன் நாளும் முன்னே

ஏன் வந்தாய் ஏன் சென்றாய்
யாரென்று எனக்கு தெரியவில்லை
ஏன் என்னை திருப்பி கொடுக்கவில்லை
ஏன் வந்தாய் ஏன் சென்றாய்
யாரென்று எனக்கு தெரியவில்லை
ஏன் என்னை திருப்பி கொடுக்கவில்லை

மழை வெள்ளம் நின்று போனதும்
மனம் வெள்ளையாக ஆனதே
நீ போனாய் போன பின்பு நானும் உன் நினைவிலே
வானில் உள்ள மேகம் போலவே வந்து சென்றாய் என் வாழ்விலே
உன் கண்கள் இன்னும் எந்தன் நெஞ்சில் மறக்கவில்லையே

ஏன் வந்தாய் ஏன் சென்றாய்
யாரென்று எனக்கு தெரியவில்லை
ஏன் என்னை திருப்பி கொடுக்கவில்லை
ஏன் வந்தாய் ஏன் சென்றாய்
யாரென்று எனக்கு தெரியவில்லை
ஏன் என்னை திருப்பி கொடுக்கவில்லை



Credits
Writer(s): Rahul Sathu
Lyrics powered by www.musixmatch.com

Link