Kagidha Megam

ஹ-ஹ-ஹா
ஹஅ-ஹஅ

காகித மேகம்
தொலைந்தது வானம்
மழைத்துளி மௌனம்
ஒ மனமே
பறவையின் தேடல் (தேடல்)
இலைகளின் கூச்சல் (கூச்சல்)
தலை விரித்தாடும் மாமரமே (மாமரமே)

இது இயற்கையின் ஊடகமா?
அல்ல இறைவனின் நாடகமா?
இவைகள் நான் அறிய
இரு விழிகள் போதலையே

இது இயற்கையின் ஊடகமா?
அல்ல இறைவனின் நாடகமா?
இவைகள் நான் அறிய
இரு விழிகள் போதலையே

காடுகளே காடுகளே
கடவுள்களின் வீடுகளே
காடுகளே காடுகளே
கடவுள்களின் வீடுகளே

ர்ர்ர்ர்-ர-சும்
ர்ர்ர்ர்-ர
ர்ர்ர்ர்-ர-சும்
ர்ர்ர்ர்-ர

மபநிசரி
சரிமாக-ரிகரி-சசா

நிழல் மட்டும் வாழ்கிற நிஜம் இதுவே
எந்தன் நிரந்திர காதலியே
உயிரினம் பேசிடும் உரைநடையே
இந்த உறவுக்கு யார் தடையே
ஆயிரம் வானவில் தோரணமே
நான் வாழ்வதும் நீ ஒரு காரணமே
மார்கழி மாதத்து மாளிகையே
என் கேள்விக்கு கேளிகையே
வளைகிற நெளிகிற நேர்வழியே
என்றும் இளமை தாய்மொழியே
வளைகிற நெளிகிற நேர்வழியே
என்றும் இளமை தாய்மொழியே
புருவத்தை உயர்த்திடும் பூச்செடியே
இனி மனிதருள் எனக்கென்ன பேச்சடியே

காகித மேகம் (மேகம்)
தொலைந்தது வானம் (வானம்)
மழைத்துளி மௌனம்
ஒ மனமே
பறவையின் தேடல் (பறவையின் தேடல்)
இலைகளின் கூச்சல் (இலைகளின் கூச்சல்)
தலை விரித்தாடும் மாமரமே (தலை விரித்தாடும் மாமரமே)



Credits
Writer(s): Vikram Varman
Lyrics powered by www.musixmatch.com

Link