Enadhuyire (From "Bheema")

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே கரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுரவே எனதுரவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளறலும் எனக்கு இசை

உன்னை காணும் வரையில் எனது
வாழ்க்கை வெள்ளை காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனால் நல்ல ஓவியம்
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

மரம் இருந்தால் அங்கே
என்னை நான் நிழலென விரித்திடுவேன்
இலை விழுந்தால் ஐய்யோ
என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

இனி மேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
வாழ்கவே நீயும் வாழ்வின் மோட்சமே

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே கரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே



Credits
Writer(s): Jayaraj Harris, Paramasivam Premkumar
Lyrics powered by www.musixmatch.com

Link