Annamae

அன்னமே
ஏன் அழகைத் தேடுகிறாய்?

சிறகின் வெண்மைக்குள்ளே
பிறரின் பார்வைக்குள்ளே

அலகை கொண்டு ஏனோ
அழகைத் தேடுகின்றாய்?

பேதையே
உன் மனதின் குழியில்
ஊறிடும் அழகை நீ
பார்த்திட மறந்தாய்!

அன்னமே
ஏன் அழகைத் தேடுகிறாய்?

ஆற்றிலே காற்றிலே
நீந்திய நீயோ
கூண்டினில் அடைபட வந்தாயா?

வேறொரு பறவை
போல் உனை மாற்ற
கண்ணீரை விலை தந்தாயா?

எங்கே உந்தன் இன்பம்?
எதற்கோ இந்த கோலம்?

அழகைத் தேடிக் கொண்டே
கரையும் இந்தக் காலம்!

அன்னமே
உன் கன்னங்கள் தாண்டி
வீழ்ந்திடும் நீரில்
நீந்துகிறாயோ?



Credits
Writer(s): M.m. Keeravaani, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link