Ulagam Ninaivil Illai

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்

மதிய வெயில் அடித்தும்
மனதில் மழைப் பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்

கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்

இது காதலின் அழகியத் தொல்லையா?
இதை மீறிட வழிகளும் இல்லையா?
இது காதலின் அழகியத் தொல்லையா?
இதை மீறிட வழிகளும் இல்லையா?
டர ரட்டட் டரடர டரா
டர ரட்டட் டரடர டரா
டர ரட்டட் டரடர டரா
டட டராரா ரா ரா ரரா

எனது மனக்குகையில் புதிய ஒளி பரவ
புவியில் மறுபடியும் பிறக்கிறேன்
இமையில் படபடப்பு இதழில் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தையென தவழ்கிறேன்

என்னை ஏனோ நானே இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்

இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
நன நன நா
நன நன நா
லல லல லா
லல லல லா
நன நன நா
நன நன நா
லல லல லா
லல லல லா



Credits
Writer(s): Premkumar Paramasivam (yugaharathi), M C Sabesan, M C Murali Raj
Lyrics powered by www.musixmatch.com

Link