Paruruvaaya

பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்
பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்

சீருரு வாய சிவபெருமானே
செங்கமல மலர்போல்
ஆருரு வாய என்னாரமுதே
உன் அடியவர் தொகை நடுவே

ஓருருவாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக் கொண்டருளே
என்னையும் உய்யக் கொண்டருளே

பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்

பத்திலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன்
உயர்ந்த பைங்கழல் காண
பத்திலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன்
உயர்ந்த பைங்கழல் காண

பித்திலன் ஏனும் பிதற்றிலன் ஏனும்
பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோ

என்றெத்தனை யானும் யான்தொடர்ந்துன்னை
இனிப்பிரிந்தாற்றேனே
இனிப்பிரிந்தாற்றேனே



Credits
Writer(s): Ilaiyaraaja, Thiruvasagam Thiruvasagam
Lyrics powered by www.musixmatch.com

Link