Paruruvaaya

பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்

சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதே உன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண்டருளே
என்னையும் உய்யக்கொண்டருளே

பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்

பத்தில னேனும் பணிந்தில னேனும் உன் உயர்ந்தபைங் கழல் காண
பத்தில னேனும் பணிந்தில னேனும் உன் உயர்ந்தபைங் கழல் காண
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே

முத்தனை யானே மணியனை யானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனேமுறை யோஎன்று எத்தனை யானும் யான்
தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே
இனிப்பிரிந் தாற்றேனே



Credits
Writer(s): Ilaiyaraaja, Mohanraj
Lyrics powered by www.musixmatch.com

Link