Moongil Kaadugale

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

இயற்கை தாயின் மடியில் பிறந்து
இப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து
திரிந்து பறந்து பறந்து

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது

வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொறியும்

தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கே காணேனோ

மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ ஓ ஓ
வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனி துளி ஆவேனோ

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது

மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே

மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ

சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ

மூங்கில் காடுகளே (மூங்கில் காடுகளே)
வண்டு முனகும் பாடல்களே
(வண்டு முனகும் பாடல்களே)
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே

இயற்கை தாயின் மடியில் பிறந்து
இப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து
திரிந்து பறந்து

ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்



Credits
Writer(s): Harris Jeyaraj
Lyrics powered by www.musixmatch.com

Link