Thaimadiye

தாய்மடியே!
உன்னைத் தேடுகிறேன்!
தாரகையும் உருகப் பாடுகிறேன்!
பத்துத் திங்கள் என்னைச் சுமந்தாயே!
ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே!
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு, நடுத்தெருவில் கிடக்கிறது பார்த்தாயே!
உதிரம் வெளியேறும் காயங்களில், என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே!
தெய்வங்கள் இங்கில்லை...
உன்னை அழைக்கிறேன்.(தாய்மடி)விண்ணை இடிக்கும் தோள்கள், மண்ணை அளக்கும் கால்கள், அள்ளிக் கொடுத்த கைகள்...
அசைவிழந்ததென்ன?
கனல்கள் தின்னும் கண்கள், கனிந்து நிற்கும் இதழ்கள், உதவி செய்யும் பார்வை...
உயிர் துடிப்பதென்ன?
பாரதப் போர்கள் முடிந்த பின்னாலும், கொடுமைகள் இங்கே குறையவில்லை!
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும், சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை!(தாய்மடி)படை நடத்தும் வீரன், பசித்தவர்கள் தோழன், பகைவருக்கும் நண்பன்...
படும் துயரமென்ன?
தாய்ப் பாலாய் உண்ட ரத்தம், தரை விழுந்ததென்ன?
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன?
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி, தேர்களில் ஏறி வருவதென்ன?
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி, தாமதமாக வருவதென்ன?(தாய்மடி)



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link