Malavikka Malavika

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா

உன்னை நான் முதல் முதலாய்
பார்த்தேனே இப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
நழுவுகிற தாவணிதான்
விடுமுறை கேட்கும் மாயமென்ன?
தடுத்திடவே நினைத்தாலும்
மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?
குடையிருந்தும் நனைகின்றோம்
காதல் மழை பொழிகிறதே
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா

நீ சிந்தும் புன்னகையே
பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலயாக போவது ஏன்?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை
சந்திக்கும் நேரம் நான்
சிலயாக ஆவதென்ன?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன்
உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா



Credits
Writer(s): Deva Ind
Lyrics powered by www.musixmatch.com

Link