Mohini

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்யப் போகிறாளோ
ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து
ஏலம் விடப் போகிறாளோ

தேன் துளிகள் பார்வை ஆனால்
பார்க்கும் பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து விட்டேன்
ஆயுள் இனி கேட்க மாட்டேன்

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்யப் போகிறாளோ
ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து
ஏலம் விடப் போகிறாளோ

தூங்கவில்லை ஓர் இரவு
தூரத்திலே பால் நிலவு
இதயம் முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்

எல்லாம் எல்லாம் நொடி நேரம்தானே
பொல்லா பொல்லாக் கனவு
என்றே கண்டேன் அதன் பின்பு நானே
அகாலம் அன்றுதான்

வெண்ணிலவு மேகத்திலே
மறைவது போல் மறைந்தவளே
வெளியே வரும் நாள் நாளையா
உலகம் உறங்கும் வேளையா

வரணும் வரணும் எனக்காகவே
நீ இதயம் இதயம் முழுதும்
எரியும் எரியும் அணையாத தீ தீ
என் தேவ தூதம் நீ

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்யப் போகிறாளோ
ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து
ஏலம் விடப் போகிறாளோ

தேன் துளிகள் பார்வை ஆனால்
பார்க்கும் பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து விட்டேன்
ஆயுள் இனி கேட்க மாட்டேன் ஏ



Credits
Writer(s): G.v. Prakesh Kumar, S. Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link