Vanthenda Palkaran

வந்தேன்டா பால்காரன்
அடடா
பசு மாட்டை பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
வந்தேன்டா பால்காரன்
அடடா
பசு மாட்டை பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி
அட பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய்ப்பாலா நம்பி
வந்தேன்டா பால்காரன்
அடடா
பசு மாட்டை பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
தன் ரத்தத்தில் ஒரு பாதி
பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும்
பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி
பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும்
பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலையே
நீ மனுஷனை ஏய்ச்சு பொழக்கிறியே
வந்தேன்டா பால்காரன்
அடடா
பசு மாட்டை பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பை வளர்க்கும் மாட்டுப்பாலுங்க
அன்னை வாரி குடுத்தது தாய்ப்பாலு
என்னை வாழ வைத்தது தமிழ்ப்பாலு
வந்தேன்டா பால்காரன்
அடடா
பசு மாட்டை பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி
அட பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய்ப்பாலா நம்பி
வந்தேன்டா பால்காரன்
அடடா
பசு மாட்டை பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link