Kanavu Ondru

கனவொன்று நான் கண்டேன் இப்பொழுது நான் கண்டேன்
அகில லோகநாதன் அப்பனவன் திருவேங்கடாதீசன் கண்டேன்

கனவொன்று நான் கண்டேன் இப்பொழுது நான் கண்டேன்
அகில லோகநாதன் அப்பனவன் திருவேங்கடாதீசன் கண்டேன்

இப்பொழுது நான் கண்டேன்
அதிசயம் போன்ற சேஷாத்ரி சிகரம் கண்டேன்
பெருமானின் கோபுர பொலிவு கண்டேன்
ஒரு 100 கோடி சூரியன் போல தோன்றிடும் ஒளி ஒன்று நான் கண்டேன்
தெய்வத்தை நான் கண்டேன் திருமேனி எழில் கண்டேன்
இப்பொழுது நான் கண்டேன்

அருள்மேவும் சங்கு சக்கரங்கள் கரங்களில் கண்டேன்
கார்வண்ணன் அவல கரமும் கண்டேன்
திருவேங்கடாதீசனை விழி முழுதும் கண்டேன்

ஹரிகண்டன் குரு கண்டேன்
ஹரி கண்டின் குரு கண்டேன் அத்தனையும் அவன் கண்டேன்

கனவொன்று நான் கண்டேன் இப்பொழுது நான் கண்டேன்
அகில லோகநாதன் அப்பனவன் திருவேங்கடாதீசன் கண்டேன்
இப்பொழுது நான் கண்டேன்
இப்பொழுது நான் கண்டேன்

Credits
Writer(s): Annamacharya, Maragadha
Lyrics powered by www.musixmatch.com

Link