Anbulla Maan Vizhiye

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்

நலம் நலம்தானா
முல்லை மலரே
சுகம் சுகம்தானா
முத்துச்சுடரே
நலம் நலம்தானா
முல்லை மலரே
சுகம் சுகம்தானா
முத்துச்சுடரே

இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே
நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே
வாடி நின்றதோ

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை

நலம் நலம்தானே
நீ இருந்தால்
சுகம் சுகம் தானே
நினைவிருந்தால்
நலம் நலம்தானே
நீ இருந்தால்
சுகம் சுகம் தானே
நினைவிருந்தால்

இடை மெலிந்து
இயற்கையல்லவா
நடை தளர்ந்து
நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா
வாழ வைத்ததும் உண்மை அல்லவா

அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை

உனக்கொரு பாடம்
சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம்
கேட்டுக் கொண்டேன்

பருவம் என்பதே
பாடம் அல்லவா
பாவை என்பதே
பள்ளி அல்லவா

ஒருவர் சொல்லவும்
ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது
நிலவும் வந்தது

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்



Credits
Writer(s): Vaalee, M.s. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link