Chinna Poove

சின்ன பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது

பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது

பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு

பாவையின் தேன் குழல் மேகமோ
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ
ஹா... ஆஅ... ஆஅ... ஆஅ...

பாவையின் தேன் குழல் மேகமோ
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ
எந்தன் காதலை மை எனப் பூசவோ
சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ

சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது

பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு

வாலிப சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஹா... ஆஅ... ஆஅ... ஆஅ...

வாலிப சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஆனந்த சங்கம சந்தமே
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே
இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகள் பொங்குதே
உன்னை கெஞ்சுதே

சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது

பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது

பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு



Credits
Writer(s): S.a. Rajkumar
Lyrics powered by www.musixmatch.com

Link