En Kathai

என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
(என் கதை)
அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது
இதயத்தில் ரகசியம் இருக்கின்றது அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில் உறவென்று அவலை நினைக்கின்றது
பேதமை நிறைந்தது என் வாழ்வு -அதில் பேதையும் வரைந்தது சில கோடு
பித்தென்று சிரிப்பது உள் நினைவு -அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு
உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே - அதில் பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு -அதன் உருவாய் எரிவது என் மனது
ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்
ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link