Aazh Kadalil

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

காதல் மொழியை பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்தவள்
சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்
அன்று சொன்னவளை
இன்று காணவில்லை அது ஏன்
அவள் வார்த்தை தொலைந்ததேன்
என் வாழ்க்கை குலைந்ததேன்

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

ல ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ
ல ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ

மார்கழி மாத கோலமிட்டால்
தண்ணீர் குடம் தூக்கி வந்தால்
கரை போல் காத்திருந்தேன்
நதியை எதிர் பார்த்திருந்தேன்

கதை மாறிடவே கரை வேரு கண்டால்
கால அலைகளுடன் புது நதியை கொண்டால் அது ஏன்
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோக கடலானேன்

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்



Credits
Writer(s): T Rajender
Lyrics powered by www.musixmatch.com

Link