Chinnanchiru Kiliye

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலிதீர்த்தே உலகில்
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா, பேசும் பொற்சித்திரமே...
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா, பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என்முன்னே
அள்ளி அணைத்திடவே என்முன்னே ஆடிவரும் தேனே
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா சின்னஞ்சிறுகிளியே

ஓடி வருகையிலே கண்ணம்மா, உள்ளம் குளிருதடி...
ஓடி வருகையிலே கண்ணம்மா, உள்ளம் குளிருதடி
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவித் தழுவுதடி
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி

உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ...
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ

உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...
உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ



Credits
Writer(s): Bharathi Subramania
Lyrics powered by www.musixmatch.com

Link