Poo Malai

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று. அஹ. அஹ.
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்பதித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே.

படம்: சிந்து பைரவி
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து.



Credits
Writer(s): Raaja Ilaiya, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link