Kannamoochchi Yaenada (Female) - From "Kandukondain Kandukondain"

சுட்டும் விழிசுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்ட கரியவிழி கண்ணம்மா வானக்கருமை கொல்லோ
பட்டு கருநீல புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகை தான்
நீலக்கடல் அலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயில் ஓசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி?
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார், கண்ணத்து முத்தம் ஒன்று



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link