Surat Al Kafirun

82.நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்றொன்பது திருநாமங்கள்
(நூற்றுக்கு ஒன்று குறைவாக) உள்ளன.
அதை நன்றாக மனனம் செய்தவர் சுவனம் செல்வார்.
அவன் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.

அவன் (99 பண்புப் பெயர்கள் பின்வருமாறு)

(1)அளவற்ற அருளாளன்.
(2)நிகரற்ற கிருபையுடையவன்.
(3)உண்மையான அரசன்.
(4)குறைகளை விட்டும் தூய்மையானவன்.
(5)ஆபத்துக்களை விட்டும் சாந்தி பெற்றவன்.
(6)அடைக்கலமும் நம்பிக்கையும் அளிப்பவன்.
(7)முழுமையாகப் பொறுப்பேற்பவன்.
(8)யாவற்றையும் மிகைத்தவன்.
(9)சீர்குலைந்ததைச் சரி செய்பவன்.
(10)பெருமை மிக்கவன்.
(11)படைக்கக் கூடியவன்.
(12)செம்மையாகப் படைப்பவன்.
(13)உருவம் அமைப்பவன்.
(14)பாவங்களை மிகுதமாக
மன்னிப்பவன்.
(15)யாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
(16)வாரி வழங்குபவன்.
(17)அதிகமாகத் தேவைகளைப் பூர்த்தி செய்பவன்.
(18)எல்லோருக்கும் ரஹ்மத்துடைய வாயில்களைத் திறக்கக் கூடியவன்.
(19)அனைத்தையும் அறிபவன்.
(20)நெருக்கடியை அளிப்பவன்.
(21)விசாலத்தைத் தருபவன்.
(22)தாழ்த்துபவன்.
(23)உயர்த்துபவன்.
(24)கண்ணியம் அளிப்பவன்.
(25)இழிவுபடுத்துபவன்.
(26)யாவற்றையும் கேட்பவன்.
(27)அனைத்தையும் பார்ப்பவன்.
(28)உறுதியாகத் தீர்ப்பளிப்பவன்.
(29)முழுமையான நீதம் உடையவன்.
(30)உள்ளங்களில் உள்ளதை அறியக் கூடியவன்.
(31)எல்லா செய்திகளையும் அறிந்தவன்.
(32)சாந்தம் நிறைந்தவன்.
(33)மகத்துவம் மிக்கவன்.
(34)மிக மன்னிப்பவன்.
(35)மதிப்பவன், குறைவானவற்றுக்குப் பகரமாக அதிகமாக கொடுப்பவன்.
(36)உயர்ந்த பதவி உடையவன்.
(37)மிகப் பெரியவன்.
(38)பாதுகாவலன்.
(39)யாவருக்கும் வாழ்வதற்குரிய பொருட்களைக் கொடுப்பவன்.
(40)அனைவருக்கும் போதுமானவன்.
(41)மாண்புமிக்கவன்.
(42)கேட்காமலேயே கொடுப்பவன்.
(43)கண்காணிப்பவன்.
(44)ஏற்றுக் கொள்பவன்.
(45)விசாலமானவன்.
(46)நுண்ணறிவாளன்.
(47)தன் அடியார்களை நேசிப்பவன்.
(48)கண்ணியமும், சிறப்பும் மிக்கவன்.
(49)உயிர் கொடுத்து கப்ரிலிருந்து எழுப்புபவன்.
(50)எல்லாவற்றையும் பார்ப்பவன், அறிபவன்.
(51)தனது சகல தன்மைகளுடன் உள்ளவன்.
(52)காரியத்துக்குப் பொறுப்பேற்பவன்.
(53)சக்திமிக்கவன்.
(54)உறுதிமிக்கவன்.
(55)உதவி செய்பவன்.
(56)புகழுக்குரியவன்.
(57)படைப்புகள் அனைத்தையும் பற்றி தெரிந்திருப்பவன்.
(58)முதன் முதலாக படைப்பவன்.
(59)மீண்டும் படைப்பவன்.
(60)வாழ்வு அளிப்பவன்.
(61)மரணமளிப்பவன்.
(62)என்றென்றும் நிரந்தரமாக உயிருடனிருப்பவன்.
(63)அனைத்தையும் நிலைநிறுத்தி வருபவன்.
(64)அனைத்தையும் தன்னிடம் வைத்திருப்பவன்.
(65)பெருமைமிக்கவன்.
(66)ஒருவன்.
(67)தனித்தவன்.
(68)எல்லாவற்றை விட்டும் தேவையற்றவன், எல்லாப் படைப்பினங்களும் அவனிடமே தேவையுடைய தலைவன்.
(69)சக்தி மிக்கவன்.
(70)எல்லாவற்றின் மீதும் முழுமையான சக்திமிக்கவன்.
(71)முற்படுத்துபவன்.
(72)பிற்படுத்துபவன்.
(73)எல்லாவற்றையும் விட முந்தியவன்.
(74)எல்லாவற்றையும் விடப் பிந்தியவன் (யாரும் இல்லாத, ஏதும் இல்லாத போது அவன் இருந்தது போல், யாரும் இருக்காத, ஏதும் இருக்காத போதும், அதற்குப் பிறகும் அவன் இருப்பான்).
(75)வெளிப்படையானவன் (அவன் இருப்பது ஆதாரங்களின் மூலம் முற்றிலும் வெளிப்படையாக உள்ளது).
(76)பார்வையை விட்டும் மறைந்து இருப்பவன்.
(77)சகல பொருட்களின் பொறுப்பாளி.
(78)படைப்புகளின் தன்மைகளை விட்டும் உயர்ந்தவன்.
(79)அதிகம் உபகாரமளிப்பவன்.
(80)தௌபாச் செய்ய வாய்ப்பு அளிப்பவன், தவ்பாவை ஏற்பவன்.
(81)பாவிகளிடமிருந்து (பழிக்குப்பழி) பகரம் வாங்குபவன்.
(82)அதிகம் பிழை பொறுப்பவன்.
(83)மிக இரக்கம் உள்ளவன்.
(84)அகிலங்களின் அரசன்.
(85)மகத்துவமும், கம்பீரமும், கிருபையும், கண்ணியமும் உடையவன்.
(86)உரிமையாளர்களுக்குரிய உரிமையைக் கொடுப்பவன்.
(87)படைப்புகளை கியாமத் நாளில் ஒன்று சேர்ப்பவன்.
(88)எவரிடமும் எந்தத் தேவையுமற்றவன்.
(89)தனது அருளால் அடியார்களைத் தேவையற்றவர்களாக ஆக்குபவன்.
(90)தடுப்பவன்.
(91)(தன் நுண்ணறிவு நாட்டத்தின் அடிப்படையில்) துன்பங்களை ஏற்படுத்துபவன்.
(92)பலன் அளிப்பவன்.
(93)பிரகாசமானவன், பிரகாசம் அளிப்பவன்.
(94)நேர்வழி காட்டி, அதில் நடத்துபவன்.
(95)முன் மாதிரியின்றிப் படைப்பவன்.
(96)எவ்வித அழிவும் இல்லாமல் நிரந்தரமாக இருப்பவன்.
(97)அனைவரும் அழிந்தபின்னும் நீடிப்பவன்.
(98)அனைத்துச் செயல்களும் தீர்ப்புகளும் சீராக அமையப் பெற்றவன், நுட்பம் உடையவன்.
(99)பொறுமைமிக்கவன்
(தன் அடியார்கள் பெருங்குற்றங்கள் செய்வதைக் கண்டும் உடனடியாக வேதனையை அனுப்பி அழிக்காமலிருப்பவன்).

-(மளாஹிருல் ஹக்)



Credits
Writer(s): Copyright Control, Copyright
Lyrics powered by www.musixmatch.com

Link