Unnai Allai

உனைக்காணவே உயிர் ஏங்குதே
நிழல் பூவிலே நிஜம் தேடுதே
தனிதீவிலே மனம் வாடுதே
காதலிலே தேய்பிறையும் தோன்றியதே
மெய்தாகமே உயிர் பாவயாய்
தொலைதூரமாய் துணை பூத்ததே
எனக்காவே விதி சேர்த்ததே
ஞாபகமோ தாகமதில் காய்கிறதே

விதவிதமாய் சுகங்களிலே மிதந்தோம்
இதம் இதமாய் இதயத்திலே இணைந்தோம்
காலைப்பூவைப் போல வாசம் வீசினோம்
பேசிப்பேசி காதல்தான் ஊற
மீண்டும் சாரல் போல சேர வேண்டுமே

உனைக்காணவே உயிர் ஏங்குதே
நிழல் பூவிலே நிஜம் தேடுதே
தனிதீவிலே மனம் வாடுதே
காதலது தேய்பிறையாய் தேய்கிறதே

மனம் தானாய் நோக
தினம் வாழ்வே வீணாக
விடை ஏதும் பாராமல்
விதி காட்டுதே போராக
விழி பாவை விரல் கோர்க்க
விரைந்தோடிப் போராட
வழித்தேட புதுப்பாதை இசை காட்டுதே
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நிழல் பூவிலே நிஜம் பார்க்கிறேன்
இனிதாகவே இதம் தோன்றுதே
காதலிங்கு முழு நிலவாய் மாறியதே
மெழுகாகவே உயிர் பாதையே
கொடும் தூரத்தில் துணையானதே
எனக்காகவே விதி சேர்த்ததே
ஓவியமாய் காதலது மாறியதே



Credits
Writer(s): Papanasam Sivan
Lyrics powered by www.musixmatch.com

Link