kandu pidi

கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்

கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
தடையம் ஏதும் இன்றி என் இதயம் திருடியவள்
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை
யோசனை செய்வதர்க்கும் அந்த பூ முகம் நினைவில்லை
வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை

திருடி சென்றதை திருப்பி தந்தால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடி சென்றவள் திரும்பி வந்தால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக
நீ என்னைத் தழுவிக் கொண்டால்
எந்தன் நெற்றிக்குள் இனிக்குமடி
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே
தங்கம் தண்ணீரில் விளையுமடி

மாறாப்பை சரியவிட்டு உந்தன் மார்போடு படரும் கோடி
பேரின்ப கவி எழுத கம்பன் பிறக்கட்டும் பழைய படி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீல இரவை நீள செய்து பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி
நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link