Thaanaa Vandha (feat. Sp Balasubramaniam & S Janaki)

ஆண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண்: தானா வந்த சந்தனமே
பெண்: உன்ன தழுவ தினம் சம்மதமே

ஆண்: வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே
பெண்: கூறைபட்டு கலங்கிடாமே குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே
ஆண்: முன்ன பின்ன அறிஞ்சதில்ல முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே
பெண்: புத்தகத்தில் படிக்கவில்ல புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே
ஆண்: இந்த மேனி இன்பத் தோணி
பெண்: ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே
ஆண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
ஆண்: யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண்: தானா வந்த சந்தனமே
ஆண்: உன்ன தழுவ தினம் சம்மதமே

பெண்: முத்துநவ ரத்தினத்தோட முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வர வேணுமே
ஆண்: முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே
பெண்: தொட்டுத் தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாடுமே
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே
ஆண்: கொத்துமல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே
பெண்: நல்ல ராசா சொல்லு லேசா
ஆண்: ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே
பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
பெண்: யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண்: தானா வந்த சந்தனமே
பெண்: உன்ன தழுவ தினம் சம்மதமே



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link