Naan Kaatrilae

ஹே... ஹே... ஹே...

நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்
என்றும் புன்னகை ஒன்றுதான் என்பதை
வாழ்வில் பூக்களோ முட்களோ
சம்மதம் என்றுமே சம்மதம்

நான் காற்றிலே அலைகிற காகிதம்

என் உடலுக்கு ஜனனம் அங்கே
என் அறிவுக்கு ஜனனம் இங்கே
இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க வந்தேனே

மூடி மறைத்த தேகம்
திறந்துப் பார்ப்போம் நேரிலே
மூடி மறைக்கும் நெஞ்சை திறந்துப்பார்க்க தெரியலே

நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்

இங்கு முதல் முதல் காதலும் உண்டு
சில மூன்றாம் காதலும் உண்டு
இங்கு வாங்கிய காயம் வாழ்வின் ஞாயம் ஆகாதோ
கடைசி ஆசை என்ன என்று கேட்டால் சொல்லுவேன் ஓ...
முதுமை வயதில் மீண்டும் இந்த பாதை சேருவேன்

நான் மாணவன் மருத்துவ மாணவன்
என் தொண்டுதான் தொழிலென ஆனவன்
வாழும் உடல்களை கோயிலாய் பார்ப்பவன்
அந்த கடவுளின் தவறுகள் தீர்ப்பவன் தீர்ப்பவன் காப்பவன்
நான் மாணவன் மருத்துவ மாணவன் ஏய்...



Credits
Writer(s): Vairamuthu, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link