Palanaal Aasai

பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜயோகம்

பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜயோகம்
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா

மலரில் தூங்கும் பனியும் நானே
பனியை தேடும் ஒளி நீயே
மலரில் தூங்கும் பனியும் நானே
பனியை தேடும் ஒளி நீயே
பூவை உடலோ பூச்சரம்
பொங்கும் மனமோ போர்க்களம்

சித்திர பெண்ணே வா
அடி செந்தமிழ் முத்தே வா
சித்திர பெண்ணே வா
அடி செந்தமிழ் முத்தே வா
பூவும் நீயானால் தென்றல் காற்று நான் தானே

பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா

எழிலார் பாவை இதழோ கோவை
இதில் ஓர் முத்தம் தரலாமா
எழிலார் பாவை இதழோ கோவை
இதில் ஓர் முத்தம் தரலாமா

மங்கை உன் மேல் சாயவா
கங்கை நதி போல் பாயவா
குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட
குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட
யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே

பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா

இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜயோகம்
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜயோகம்

பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link