Pookkalai Killi Vandhu

பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்
புன்னகை போதும் என்று இங்கே சொன்னது யார்
தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே
எங்ஙனம் வாசம் வீசுவதோ

வண்ணங்கள் நீக்கிவிட்டால் எங்ஙனம் பேசுவதோ
கண்ணாடி ஜாடிக்குள்ள எங்ஙனம் ஆடுவதோ
தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ

நேற்று கேட்ட கூச்சல் எல்லாம்
மௌனம் ஆகி கொல்கிறதே
ஆட்டம் போட்ட கூடம் இன்று
காலி ஆகி நிற்கிறதே

தாயும் அங்கே
தந்தை அங்கே
ஏன் அனாதை போல இங்கே
தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே
எங்ஙனம் இன்பம் சூடுவதோ

பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்
புன்னகை போதும் என்று இங்கே சொன்னது யார்
தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே
எங்ஙனம் வாசம் வீசுவதோ

வண்ணங்கள் நீக்கிவிட்டால் எங்ஙனம் பேசுவதோ
கண்ணாடி ஜாடிக்குள்ள எங்ஙனம் ஆடுவதோ
தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ
தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே
எங்ஙனம் இன்பம் சூடுவதோ

Credits
Writer(s): Arrol Corelli, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link