Yaenadi

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால

வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல
வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

மெட்டில் இசைஞானி
என்றும் அழகாக
செய்கின்ற மாயம் போல
என்னில் பல நூறு
இன்பம் தர நீயும்
வந்தாயே கூடி வாழ

நித்தமும் கோயில் சென்று
வரும் பக்தர்கள் செய்வது யாகம்
அத்தனை பேரும் ஏங்க
வரம் என்னிடம் வந்தது யோகம்
போதும் இது போதும்
உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

தன்னந்தனி வீடு
செல்வம் பதினாறு
வந்தாலும் தேவை நீயே
அன்னை மடி வாசம்
உன்னில் தினம் வீச
கொண்டேனே காதல் நோயே

எத்தனை கோடி ஜென்மம்
உயிர் வந்தது உன்னையும் தேடி
ஒப்பனை ஏதும் இல்லா
உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி
நாடி உனைக்கூடி
வரும் இன்பத்தில் போரேனே ஆடி

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால

வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல
வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link