Aathadi Manasudhan (From "Kazhugoo")

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே

அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே

அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே

கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே... காய்ச்சலா மாறும்
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே... மார்கழி மாசம்

அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன் உறுவம் தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா

ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச... தைரியம் இல்ல...
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
இருந்தும்... வெட்கத்தில் செல்ல...

காலம் யாவும் நானும், உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்
உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா



Credits
Writer(s): Yuvanshankar Raja, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link